Wednesday, August 03, 2005

பிரமிக்க வைக்கும் கௌசல்யா !

சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த, கௌசல்யா என்ற மாணவியைப் பற்றிய செய்தியை பலரும் படித்திருக்கலாம். இவ்விளம்பெண்ணின் சிறந்த கல்வியார்வமும், அயரா உழைப்பும், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும், தன்னடக்கமும், யாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும். கௌசல்யா, சிறுவயதிலேயே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, அந்தியூர் கிராமத்தில் ஒரு ஹோட்டலில் கூலி வேலை செய்து வரும், அவரது தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்டவர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சமாளித்து, போராடி, 'மருத்துராக வேண்டும்' என்ற ஒரே குறிக்கோளோடு படித்தவர் !

கௌசல்யா, அந்தியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வுகளில் முறையே 475/500 மற்றும் 1149/1200 என்று மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார் ! கௌசல்யா, இயற்பியலில் 199 மதிப்பெண்களும், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்களும், பொது நிழைவுத்தேர்வில் 98.33 மதிப்பெண்களும் பெற்றார் என்ற தகவல், கேட்பவரை வியப்பின் உச்சத்துக்கு இட்டுச் செல்லும் !!!

இவருக்கு, பெருமை வாய்ந்த, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், 'இளமையில் வறுமை' எனும் கொடுநோய் பெரும் தடைக்கல்லாக குறுக்கிட்டது. தனது அயரா உழைப்பு தந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தருணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய தொகை வேண்டி (ஏன், அந்தியூரிலிருந்து சென்னை செல்ல இரயில் கட்டணம் கூட கையில் இல்லாத நிலைமையில்!) பல இடங்களில் பணவுதவு கேட்டு அலைய வேண்டிய அவலநிலை இம்மாணவிக்கு ஏற்பட்டது பெரிய கொடுமை தான் !!!

கௌசல்யாவின் நல்ல நேரம், அந்தியூருக்கு வருகை தந்திருந்த மாநில மனித உரிமைக் கழக உறுப்பினர் திரு.சம்மந்தம் வாயிலாக, இம்மாணவியின் பரிதாப நிலைமை ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. நமது முதலமைச்சர் கௌசல்யாவை அழைத்து, கல்லூரிக்கான முதலாண்டு கட்டணத்திற்கும், புத்தகங்கள் வாங்கவும் பணவுதவி செய்தார். அதைத் தொடர்ந்து, மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன் வந்தனர்.

கௌசல்யா, ஆகஸ்ட் 1-ஆம் தேதி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து, தனது குறிக்கோளின் முதல் இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டர் !!! கௌசல்யாவின் முகத்தில் இப்போது தான் புன்னகையை பார்க்க முடிகிறது !!! இதே போல். பல கௌசல்யாக்களுக்கு, அவர்கள் தொலைத்த புன்னகையை மீட்டுத் தர வேண்டிய கடமை, நம் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது !!!

நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, ஒரு உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு வழங்கலாம் என்பது என் எண்ணம். நூறு பேர் தலா 500/- தந்தாலே, மொத்தம் 50,000/- திரட்டி விடலாம். உரியவரிடம் தொகையை சேர்ப்பிப்பது மற்றும் அத்தொகை அம்மாணவிக்கு நல்ல வகையில் பயன் தருமாறு செய்வதும் குறித்து பின்னர் முடிவு செய்யலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

12 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

பாலா,

எந்த விலாசத்துக்கு அனுப்பணுமுனு சொல்லலியே?

துளசி.

enRenRum-anbudan.BALA said...

துளசி அக்கா,
//எந்த விலாசத்துக்கு அனுப்பணுமுனு சொல்லலியே?
//
அயல்நாட்டிலிருப்பவரிடம் பண உதவி பெறுவது குறித்து இன்னும் முழுமையாக யோசிக்கவில்லை. ராம்கியிடமும், இது குறித்து
பேசி விட்டு விவரங்கள் தருகிறேன். நன்றி.
எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

அனைத்து நண்பர்களுக்கும்:

பண உதவி செய்ய விரும்புவர்கள் கீழ்க்கண்ட (ராம்கியின்) வங்கிக் கணக்குக்கு அனுப்பவும்.
***********************************
J. RAMAKRISHNAN
A/C No. 608801500701
ICICI Bank
**********************************
டெபாசிட் செய்தவுடன் மறக்காமல் விபரங்களை (பெயர், தொகை, தேதி ..) தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு
தெரிவிக்கவும்

**********************************
balaji_ammu@yahoo.com
ramki@rajinifans.com
**********************************
எ.அ.பாலா

Raja said...

vazaththukkaL paalaa. nalla muyaRsi

Ramya Nageswaran said...

பாலா, மிகவும் நல்ல முயற்சி..இதை நல்ல முறையில் செயல்படுத்த ஒருவரை அல்லது தொண்டு நிறுவனத்தை தேர்ந்தேடுத்துள்ளீர்களா? என்னால் சில பெயர்கள் பரிந்துரைக்க முடியும். தேவை என்றால் சொல்லுங்கள். நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல்லுக்கு தகவல் அனுப்புகிறேன்.

said...

nalla muyarchi...

said...

ஒரு (அல்லது இரண்டு) ஈனப்பிறவி இப்பதிவுக்கும் (-) போட்டுத் தள்ளியிருக்கு போல

said...

அன்புநிறை பாலா,

எப்படி உங்களைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. சேவை மனப்பான்மையில் ராம்கியுடன் கைகோர்த்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ச.சங்கர் said...

அன்புள்ள பாலா,
போட்டு தாக்குறயே.மிக நன்று.

said...

to the kind attention of thamizmanaM READERS ............

said...

To the attention of all thamizmanam readers .............

said...

great work!
Karunanidhi Government had a program where the top 3 rank-holders in each district were sponsored for higher education, completely by the government. Jayalalitha stopped it immediately after she came to power. My younger sister finished her engineering education in that scholarship, and we recieved all the money, amounting to around 1.5 lakhs without any trouble, without having to bribe anybody. It is sad that Jaya has stopped this. My sister had scored 1154/1200. She was third in Kancheepuram district. I am sure Kausalya would be a district rank-holder in her district too. I wonder if somebody in the media can pick up on this, and report it..and campaign Jaya's government to bring that program back.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails